அன்பு சுமந்தவனை

அன்பு சுமந்தவனை
சிலுவையில் அறைந்தோம்
அஹிம்சை புத்தனின்
சிலையை தகர்த்தோம்
அண்ணல் காந்தியை
அன்று இழந்தோம்
அணு குண்டு பயத்தால்
அமைதி இழக்கிறோம்
ஓடி வரும் காட்டாற்றை
ஒதுங்கி நிற்கச் செய்தோம்
கருகும் பயிர் கண்டும்
கண்ணடைத்து நிற்கிறோம்
சங்கம் அமைத்து ஜாதி வளர்க்கிறோம்
மதங்கள் பேசி மனம் முறிக்கிறோம்
கடவுள் காட்டி கட்சி வளர்க்கிறோம்
மொழியின் பெயரால் மோதிக் கொள்கிறோம்
மதம் பேசி இனம் பேசி மயங்கியது போதும்
மனம் பேசி மனிதம் வளர்ப்போம்
வீட்டிற்கொரு மரம் போல
வீடுகள் தோறும் மனிதம் வளர்ப்போம்

எழுதியவர் : thilakavathy (30-Aug-13, 5:36 pm)
பார்வை : 102

மேலே