அழகு ஆஷா.........
![](https://eluthu.com/images/loading.gif)
படித்ததில் வியக்க வைத்தது...
55அடி நீளம்... 39 பவுண்டு எடையில் தலைமுடி:
பொதுவாக மனிதர்கள் அழகு சம்பந்தமான விஷயங்களில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வார்கள். அதிலும் கூந்தல் விஷயத்தில் கேட்கவே வேண்டாம். அந்தவகையில், உலகிலேயே மிக நீளமான முடி வளர்த்து கின்னஸ் சாதனை புரிந்தவரான அட்லாண்டா பெண், தொடர்ந்து தனது சாதனையை தானே முறியடித்த வண்ணம் உள்ளார்
நமக்கெல்லாம் வயதாக வயதாக முடி வளர்ச்சி குன்றிப்போய், சீக்கிரமே வழுக்கை ஆகிவிடுவோமோ என அச்சம் இருக்க, இவருக்கோ நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக25 வருடமாக.... ஜார்ஜியா நாட்டின் அட்லாண்டா நகரில் வாழ்ந்து வருபவர் ஆஷா மண்டேலா. தற்போது 50 வயதாகும் ஆஷா தற்போது தனது மகன் மற்றும் இரண்டாவது கணவருடன் வசித்து வருகிறார
. கூந்தல் பிரியையான இவர் கடந்த 25 வருடங்களாகத் தனது முடியைக் கத்தரித்துவிடாமல் கவனமுடன் பாதுகாத்து வருகின்றாராம். முதல் முறையாக கடந்த 2008ஆம் ஆண்டு இவரது நீளமான கூந்தல் கின்னஸில் இடம் பெற்றது. அடுத்த வருடம் வேறு யாராவது இவரது சாதனையை முறியடிப்பார்கள் என எதிர்பார்க்கப் பட்டநிலையில், சென்ற ஆண்டை விட அதிக முடியுடன் வந்து மீண்டும் தனது சாதனையை தானே முறியடித்தார் ஆஷா.அடுத்தடுத்த வருடங்களிலும் தொடர்ந்து தனது சாதனையை தானே முறியடிக்க ஆரம்பித்த ஆஷாவைக் கண்டு, கின்னஸ் புத்தகமே நீள முடி சாதனையை நிறுத்தி விட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
சிறுசிறு பின்னல்களாக தனது முடியினை அலங்கரித்துக் கொள்ளும் ஆஷா வெளியில் செல்லும்போது குழந்தைகளை சுமந்து செல்லுவது போன்ற குறுக்குத் துணியினைத் தோளில் கட்டிக்கொண்டு அதில் தனது முடியை சுருளாக்கி வைத்துக் கொள்கின்றாராம். சுமார் 39 பவுண்டு எடை கொண்ட இவரது முடி மூலம், பல பெண்களின் கனவுக்கன்னி ஆகிவிட்டார் ஆஷா. இவரது முடி ஒன்பதாவது உலக அதிசயம் என்றும் இவரை நடமாடும் சரித்திரம் என்றும் புகழ்கிறார்களாம் இவரது ரசிகைகள
. ஏற்கனவே, இரண்டு முறை மாரடைப்பு வந்தபோதும், கேன்சர் நோயினால் தாக்கப்பட்டு மருத்துவம் செய்துகொண்ட போதும் இவரது முடி கொட்டவில்லை என்பதை அதிசயமாகச் சொல்கிறார்கள் இவரது உறவினர்கள்.இத்தனை நீளமான முடி சுகாதரத்திற்குக் கெடுதல் என மருத்துவர்கள் அறிவுரை கூறியபோதும், முடியை வெட்டிவிட சம்மதிக்கவில்லையாம் ஆஷா.