இந்தியாவில் இருக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களும்.....அதன் விலை உயர்வும்... இதைத்தான் சொல்வது வெளிநாட்டுக் கொள்கை என்று...?

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருவதால் என்ன..? ரூபாயின் மதிப்பு உயர்வதால் யாரும் கவலைப்பட வேண்டியதில்லை என்று சொன்ன நிதி அமைச்சர் மற்றும் பிரதமர் அவர்களும் இதை அறியாதவர்களா என்ன..?

உதாரனத்திற்க்கு சில இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்கள் சிலவற்றை பார்ப்போம்..

அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாதாம் கிலோ ரூ 500 லிருந்து ரூ 650 விலை உயர்ந்துள்ளது...

பிஸ்தா பருப்பு கிலோ ரூ 1000 லிருந்து ரூ 1200 விலை கூடியுள்ளது..

பாயாசம் சாப்பிட பயன்படுத்தப்படும் சாரை பருப்பு கிலோ ரூ 800 லிருந்து ரூ 900 ஆக உயர்வு...

வெள்ளைக் கடலை சுண்டல் சாப்பிடுவோமே அந்த வெள்ளைக் கடலை கிலோ ரூ 70 - ல் இருந்து ரூ 90 ஆக உயர்வு...

கறுப்புக் கடலை இதுவும் சுண்டல் தான் தற்பொழுது டாஸ்மாக் கடையில் இதுதான் மிகக் குறைந்த விலையில் கிடைக்கிறது...கிலோ ரூ 50 - ல் இருந்து ரூ 60 ஆக உயர்ந்துள்ளது...

ஜப்பான் நாட்டிலிருந்து கற்பூரம் அதுதான் சூடம் கிலோ ரூ 320 - ல் இருந்து ரூ 360 ஆக விலை உயர்வு...

அரபு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பேரீச்சம் பழம் முதல் ரகம் ஒரு கிலோ ரூ 150 - ல் இருந்து ரூ 180 ஆக விலை உயர்வு...
இரண்டாம் ரகம் ரூ 70 - ல் இருந்து ரூ 90 ஆக விலை உயர்வு...

கனடா நாட்டில் இருந்து இறக்குமதியாகும் வெள்ளை பட்டாணி 50 கிலோ கொண்ட மூட்டை ஒன்று ரூ 1500 - ல் இருந்து ரூ 1650 ஆக உயர்வு..

ஆஸ்திரேலியாவில் இருந்து வரும் பட்டாணி 50 கிலோ மூட்டை ரூ 1600 - ல் இருந்து ரூ 1780 ஆக விலை உயர்வு..

ஜப்பான் மற்றும் தைவான் நாடுகளில் இருந்து அஜினமோட்டோ இறக்குமதி செய்யப்படுகின்றன ...கிலோ ரூ 90 லிருந்து ரூ 110 ஆக உயர்ந்துள்ளது..

சிங்கபூர் மற்றும் இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பிரியாணிக்கு பயன்படும் லவங்கம் கிலோ ரூ 800 லிருந்து ரூ 1000 ஆக உயர்வு..
சுருள் பட்டை கிலோ ரூ 700 லிருந்து ரூ 800 ஆக விலை உயர்வும் ஆகி உள்ளன..

இந்தோனேசியா மற்றும் மலேசியா வில் இருந்து இறக்குமதியாகும் பாமாயில் ஒரு லிட்டர் ரூ 56 - ல் இருந்து ரூ 68 ஆக உயர்வு..

தென் அமேரிக்கா, ரசியா மற்றும் உக்ரைன் நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சன் பிளவர் ஆயில் ஒரு லிட்டர் ரூ 86 - ல் இறுதி 98 ஆக உயர்வு...

ஆமாம் பேரீட்சம் பழம் தவிர மேலே குறிப்பிட்டுள்ள பொருட்கள் அனைத்துமே இந்தியாவில் உற்பத்தி செய்யலாமே...ஏன் செய்யவில்லை... அதுதான் வெளிநாட்டுக் கொள்கை...!

சமீபத்தில் பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் விவாசியகளைப் பார்த்து கடும் கோபத்துடன் இவ்வாறு கூறினார் என்று தெரியும் அனைவருக்கும்...

இந்தியாவில் எக்கச்சக்கமான விவாசியகள் விவசாயம் செய்கிறார்கள்... இவ்வளவு பேர் விவசாயம் செய்ய தேவையில்லை என்று கூறினார்...

இதற்கு என்ன பொருளாக இருக்கும்...?

எதற்கு அய்யா இவ்வளவு பொருட்களையும் அதாவது இந்தியாக்காரன் சாப்பிடும் அணைத்து உணவுப் பொருட்களையும் இறக்குமதி செய்து சுமார் லாபம் அடைந்து வருகிறீர்கள்...?

நான் விவசாயிகளை அடித்து துவைத்து விரட்டி விடுகிறேன்...அவனது நிலத்தை பிடுங்கியும் தருகிறேன்....( விவசாய நில மீட்கும் பில்....) பேசாமல் நீங்களே இங்கு வந்து அனைத்தையும் இலவசமாக பெற்றுக் கொண்டு பயிரிட்டு இங்கேயே விற்று பெரும் லாபம் ஈட்டலாமே...என்ற கருத்தாக இருக்குமோ...?

இன்னும் வரும்...( எனவே இத்துடன் முடித்துக் கொள்வோம்....)

சங்கிலிக்கருப்பு

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (30-Aug-13, 5:21 pm)
பார்வை : 318

சிறந்த கட்டுரைகள்

மேலே