மெர்லின் சில்வாவை குடும்ப பெண்கள் மீதான வன்முறைச் சட்டம் மற்றும் ஈவ் டீசிங் வழக்கில் கைது செய்ய வேண்டும்...!

இலங்கை சென்றுள்ள ஐ.நா.வின் மனித உரிமை ஆணையர் திருமதி நவநீதம் பிள்ளை அவர்களை திருமணம் செய்து கொள்ள தயாராகவும் விருப்பமாகவும் உள்ளேன்....திருமணம் செய்த பிறகு இலங்கையை சுற்றிக் காண்பிக்கிறேன் என்று கூறியிருந்தார் இலங்கை அமைச்சர் மெர்வின் சில்வா அவர்கள்...
இலங்கை தமிழர்களையும்...முள்வேலி முகாம் மக்களையும் சந்தித்து வரும் நவிபிள்ளை அவர்கள் இலங்கை அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார் என்பதையும் காணாமல் போனவர்கள் பற்றி கேட்டும் அறிந்தும் வரும் வேளையில்....
வரும் செப்டம்பர் மாதம் தனது இலங்கை குறித்த அறிக்கையை சமர்பிக்க இருக்கும் வேளையில் தான் இவ்வாறு ஈவ் டீசிங் செய்யப்பட்டுள்ளார்....
அதுவும் இலங்கை மந்திரி அவர்களாலேயே ....புலம் பெயர் மக்களும் தமிழக மக்களும் இவர் மீது வழக்கு போட வேண்டும்...மனித உரிமை ஆணையர் மற்றும் தனது குடும்பத்தை நிர்வகித்து வரும் பெண்மணி..முதிர்ந்த வயது நிரம்பிய சமூகத்தின் மிக முக்கிய பதவியில் இருப்பவரை.....
அவமரியாதை செய்வது....திருமணம் செய்து கொள்கிறேன் என்று கேலி செய்வதை கண்டிப்பதுடன் இவர் மீது ஏன் தமிழ் நாட்டிலும் ஏனைய புலம்பெயர் நாட்டிலும் வழக்குப் போடக் கூடாது...?
ஒரு சர்வதேச அந்தஸ்தில் உள்ள ஒரு நிறை வயது நிரம்பிய ஒருவரையே இவ்வாறு பேசுகிறார்...
கிண்டல் செய்கிறார் என்றால்...ஈழத் தமிழ் பெண்களை இவர்களும் இவர்களின் ராணுவமும் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்திருப்பார்கள் என்பது நூறுசதவீத உண்மை என்று ஐ.நா.விடம் ஏன் புதிய புகார் அளிக்கக் கூடாது என்கிறார்கள் ஊடகவியலாளர்கள்....!
சங்கிலிக்கருப்பு