குற்றமுள்ள நெஞ்சுக்கு மட்டும் !!!

கிழிந்த புடவை !
இல்லாத குறைக்கு
கட்டுகிறோம்
அதில் எம் ,
சொல்லாத வறுமை
தெரியும் ....
என் செய்ய ?
தெரியும் "உடலும் "
மானத்தை மறைக்க
ஒட்டு போட்டதாவது வேண்டுமே !

செதில் விழுந்ததோ மீனில்
பதில் உரைத்திடு !
பெண்ணில் வெறி பிடித்ததோ என்றால்,
"பொட்டை" என உன்னை கூறவா
இல்லை பெண்ணை கூறவா ?

உன்னை பெற்றவள்
என்றாலும் இதே கெதிதான் .....
பெற்றவள் மானம் -
காக்க விளைந்தால்,
மற்றவள் மானத்தை மறந்து விடாதே !

எழுதியவர் : (31-Aug-13, 10:33 am)
சேர்த்தது : anusha nadaraja
பார்வை : 86

மேலே