தா...வரம்!
தாவரம்!
இந்தத் தரணிவாழ
இறைவன் தந்த வரம்!
வெறும் மரங்கள் அல்ல!
ஆக்சிஜன் சுமக்கும்
அற்புதப் பெட்டிகள்!
வேர்வழி நீர்வாங்கி
வான்வெளி துடைக்கின்ற
ஒட்டடைக்குச்சிகள்!
ஓசோன் படலத்தின்
உயிரணுக்கள்!
கார்முகில் ஒழுகிட
காரணிகள்!
வாழ்ந்தபின்
புதைந்துபோகும்
மனிதர்களே!
வீண்ஜம்பம் எதற்காக?
மரங்களைப் பாருங்கள்!
புதைத்தபின்னும் வாழ்கிறது!
வையகத்தின் விழிநீரை
வாஞ்சையுடன் துடைத்திடவே
வெயில் மழையில்
நனைகிறது
நமக்காக வாழ்கிறது!
மருந்தாக விருந்தாக
மரமாக உரமாக
மழையாக நிழழாக
மண்ணுக்கே குடையாக
வாழ்கின்ற தாவரமே!
உன்னை வாழ்த்திடுவேன்
அன்பினமே! அனுதினமே!!
கவியாக்கம்.
கவிமகன் காதர்