எனக்கு அவள் மீது காதலில்லை ....!!!

நீண்டநாள் நானும் அவளும்
நல்ல நண்பர்கள் ...!!!

மெதுவாக நுழைந்தது
அவள் மனதில் காதல்
தவறில்லை -என் மனதில்
வந்திருக்கலாம் வரவில்லை
அதற்காக நான் காதல் ..
இல்லாதவனுமில்லை ...!!!
ஆனால் எனக்கு அவள் மீது
காதலில்லை ....!!!

தோழியே உன்னை
இந்த நிமிடம் வரை கடந்த
கால நட்பு நினைவுடன்
வாழுகிறேன்
காதல் நினைவாக
மாற்ற முடியவில்லை
என்னால் ....
மன்னித்துவிடு என்னை ...!!!

எழுதியவர் : கே இனியவன் (1-Sep-13, 7:04 pm)
பார்வை : 186

மேலே