உயிருக்கு உயிரான பெண்ணே!..

உயிர்களுக்கு
உயிராகயிருந்து
உயிர்களில் உயிராகி
உயிர்களையெல்லாம்
உயிர்ப்பிப்பவள் பெண்!

அன்பிர்க்கு
அன்பாகி
அன்பினால் அன்புவளர்த்து
அன்போடு
அன்பானவள் பெண்!

மகிழ்ச்சிக்கு
மகிழ்ச்சிகூட்டி
மகிழ்வை மகிழ்வித்து
மகிழ்ந்து
மகிழவைப்பவள் பெண்!

பண்பிற்கு
பண்பாகி
பண்பைவளர்த்து பண்போடு
பண்புசேர்த்து
பண்பானவள் பெண்!

இன்பத்திற்கு
இன்பம்சேர்த்து
இன்பத்தை இன்பப்படுத்தி
இன்பத்தோடுகூடி
இன்பமயமானவள் பெண்!

எழுதியவர் : சீர்காழி.சேதுசபா (2-Sep-13, 9:51 am)
பார்வை : 218

மேலே