ஆவாரம் பூவெனும் ப்ரியமான ப்ரியாவிற்கு .. திருமண நாள் வாழ்த்துக்கள்

கற்கண்டாய் மொழி பேசி
என் காதினிலே தேன் வார்த்தாள்
கவிதையிலே தமிழ் பேசி
உள்ளமதை கொள்ளை கொண்டாள்!!!

இனியவளாம் குமரியவள் ப்ரியாவும்
திரு மதிஎன்றே ஆகும் நாள்
திருநிறை செல்வனவன்
கார்த்தி கேயனின்கரம் சேரும் நாள்!!!

மணநாள் குறித்த சேதி கேட்டு
வந்த இன்பம் என்ன சொல்ல?
வந்திடுவேன் என் செல்லமே - உனக்கு
வாழ்த்துரைக்க வடலூரும்தான்!!!

பதினாறு செல்வங்கள் குறையாது
நலமுடன் வளவாழ்வு காண
கண்மணியே வேண்டுகிறேன்
நான் வணங்கும் கடவுளிடம்!!!

ஊர் உலகம் போற்றும்படி
உறவனைத்தும் மெச்சும்படி
இணைபிரியா இனிய வாழ்வே - நீவீர்
வாழ்ந்திடுவீர் இறுதிவரை!!!

என்னுடைய நல்லாசியுடன்
இறைவனின் ஆசியுமே
ப்ரியமானவளே உனக்குண்டு
வாழ்த்துகிறேன் மகிழ்வு கொண்டு!!!

வாழ்த்துக்களுடன்,
அன்புத் தோழி,
சாந்தி.

எழுதியவர் : சொ. சாந்தி (2-Sep-13, 1:15 pm)
பார்வை : 196

மேலே