காதல் கொலைகாரி

ஆயுதம் கொண்டு தாக்கிருந்தால்
ஆபத்தை உணர்ந்து அலறிருபேன்
ஆனால் அவள் ஆயுதமென
கையிலெடுத்ததோ காதலினை.....

சிறு புன்னகைதான்
மறந்துவிட்டேன் என்னை
ஒருசில பார்வைகள்தான்
நானோ குருடனானேன்
தொடர்ச்சியான சில சந்திப்புகள்
மீண்டும் சந்திக்க முடியாதஎன்று
ஏங்கி எனக்கேதெரியலாமல்
அவளிடம் சரணடைந்தேன்....

முன்பு அரிந்திராத ஒரு உறவு
அதனாலதான் அவளின்
சிறு புன்னகைகூட என்னுள்
புதுவசந்தமாய் தெரிந்தது
அவளின் பார்வைகள்
என்னை விலையாய் கேட்க
விற்றுவிட்டேன் என்னை அடிமையாக....

ஒருநாள் பார்க்கவில்லை
என் சிலநாள் தூக்கம் போகும்
அவளின் கண்ணீரோ என்னை
கல்லறை வரை கொண்டு சேர்க்கும்...

அவள் அழுக நான் அழுவேன்
அவள் சிரிக்க நான் சிரிப்பேன்
அவளில்லா உலகம்
என்னில் சுழலாது அவளை
சுற்றியே என் உலகம்
அவளின் விளையாட்டு பொம்மையானேன்....

காலம் காதல் என்னவென்று
உணர்த்தியது காலம்
அவள் மனதை மாற்றியது
காரணம்--காரணமில்லாமல் சொல்லும்
அவளின் சில காரணங்கள்....

என் முகம் அவளுக்கு விடியா மூஞ்சியாம்
அவளின் விடியலுக்காய் நான் கண்விழித்து
காத்திருந்ததை மறந்து....

என் முகம் அவளுக்கு அழு மூஞ்சியாம்
அவளுக்காகத்தான் நான் அழுகிறேன்
என்பதை மறந்து....

இன்றும் அவள் சிரித்துகொண்டுதான்
இருக்கிறாள் நானோ அவளால்
சிதைந்துகொண்டிருகிறேன்....

அவளும் ஒருவகையில் கொலைகாரித்தான்
கத்தி கொண்டு குத்தவில்லை
ஆனால் கொன்றுவிட்டாள் என் மனதை
இதயம் கூட துடிக்கவில்லை
இதயமற்ற அவளால்.....

ஆயுதம் கொண்டு வந்திருந்தால்
தப்பிவிடுவேன் என்றுதான் அவள்
காதலெனும் கொலைவாளினை
கூர்மையாக தீட்டி குத்திவிட்டாள்
குருதி கொட்டவில்லை ஆனாலும்
என் இறுதி நாட்களை இன்றே
என்ன தொடங்கிவிட்டேன்.....

காதல் கொலைகாரி அவள்
காதலால் கொலையானவன் நான்
தண்டனை கூட அவள் ஏற்கவில்லை
நானே தண்டனையை சுமந்து வாழ்கிறேன்....

எழுதியவர் : பாலமுதன் ஆ (29-Dec-10, 7:24 pm)
சேர்த்தது : பாலமுதன் ஆ
பார்வை : 362

மேலே