கனியவள்
கருமுகிலினை வகையாய் தொடுத்த
கடிய,நெடிய,கூந்தலில்
சூடிய மலர் என்னவோ குவளை!
ஆதவன் முகம் கண்டு
அந்தியில் மலரும் நிலவுண்டு!
நின் முகப்பொலிவுதனில் என்று!
நாணிரண்டு இருபுறமும்
மயில் தோகை இமைதன்னில்
கயலினக் கண்களவை!
கங்குலில் மிளிர்ந்திடும் உடுக்கலவை
உள்ளல்ப டுத்தும்தோ ரணையோ?
பொன் மேனி படர்ந்த
பொற் "பூ" மலராள்!
கன்னமிரண்டும் மாதுளை
கனி நறுந்தேனூறும் செவ்விதழ்தனில்
முத்தும் வெண்மலரும் ஈடாம்!
முல்லை மலரால் உன் பற்களவை
கொள்ளை கொள்ளும் மனதும் மகிழ்ந்திட
உதிர்த்திடும் புன்னகையை!
வெள்ளி நாணயங்களை கரங்களில்
அள்ளி தரையினில் இறைகுங்காள்
துள்ளி எழும் இனிய ஒலி போலும்
செவியினில் பாய்ந்திட்ட குறுநகை!
வையகத்து கவினர்களின் உவமைப்பொருள்!
எக்காலமும் சுவை குன்றா
அவள் ஓர் "முக்" கனியவள்!
கவிதை
சேலம் நீலா துரை சுரேஷ்
+91 9444148503