ஓர் விலைமகளின் கதை
சமுதாயத்தின் பார்வையில் நானொரு சாக்கடை!.
வறுமையின் பிடியினில் உழைத்து வாழ ஆசைப்பட்ட எனக்கு உதவின பல கரங்கள்!
அபயக்கரங்கள் என்றெண்ணி யான் கண்ணிருடன் தொழுதேன்! அந்தோ அக்கரங்கள் என் கண்ணிரை துடைக்கும் கரங்கள் அல்ல, என் கற்பை சூறையாடும் கரங்கள் என்பது என்னை கட்டிலுக்கு அழைத்தபோது தான் அறிந்தேன்!
"உதவி" என்ற பெயரில் உபத்திரம் செய்யும் அவர்கள் மனிதர்களும் அல்ல!
மிருகங்களும் மனிதன் என்ற போர்வையில் நாட்டில் உலவுகின்றனவே என்று எண்ணி வேதனைபட்டேன் .
உதவி வேண்டாம் தன்மானம் இருக்கின்றது!
மறுத்தேன்!
சோர்ந்துகிடக்கவில்லை வீ ட்டின் மூலையில்!
செயலாற்ற புறப்பட்டேன் புரச்சிப்பெண்ணாய்!
உழைத்தேன்! உடல் மெலிய! கண்களில் கருவளையம் படிய!
ரத்தம் வேர்வையாக நிலத்தில் விழ!
ஒட்டிய வயிறுடன்,தளர்ந்து வாங்கிய கூலியை தட்டிப்பறித்தனர் சில தறுதலை நாய்கள்!
கதறினேன்!
என்னடி செய்வாய்?
சேலை தலைப்பை இழுத்தான் ஒருவன்!
இரு கைகளில் உள்ள விரல் நகங்களால் போராடினேன்!
வெறிநாய் ஒன்று என் கன்னத்தில் ஓங்கி அறைய கிழே விழுந்தேன்!
"இறை"யை சுற்றி நிற்கும் கழுகுகளாய் எனை சுற்றி அந்த மிருகங்கள்!
இவளின் இளமை என்னை அழைக்கிறது என்றான் ஒருவன்!
மற்றவர்கள் சிரித்தனர்!
மது-மாது இதில் எது போதை அதிகம் என்றான் மற்றொருவன்?
"மது" என்றான் ஒருவன்!
பிறர் சிரித்தனர்!
அட பைத்தியமே! "மாது" தான் என்றான் இன்னொருவன்!
அதையும் பார்த்துவிடலாம் இப்போது!
சூழ்ந்தனர்!
அவர்களிடம் போராடி தோற்றாள்! மயக்கமுற்றாள்!
சுயநினைவு இழாந்த அவளிடம் காமப்பசியினை போக்கிவிட்டு குற்றுயிரும் குலை உயிருமாய் கிடந்த அவளை ஓர் மலைச்சரிவிலே உருட்டிவிட்டனர்!
பொழுது புலர்ந்தது!
நெற்றியில் காயம்பட்டு,குருதி வெளிப்பட்டு, கிழிந்த ஆடையோடு முட்செடியின் ஓரத்தில் மல்லாந்து கிடந்தாள்!
மயக்கம் தெளிந்து எழுந்தாள்!
சுற்றிலும் நின்றவர்களை பார்த்தாள்!
தன்னிலை அறிந்தாள்!
இரு கைகளால் தான் "மானத்தை" மறைத்தாள்!
முழுவதும் மழையில் நனைந்தவளுக்கு இனி முக்காடு எதற்கு?
கூட்டத்தில் ஒருவள்!
மானம் கெட்டவளுக்கு இனி வாழ்வெதற்கு?
த்தூ!............
என்று காறி உமிழ்ந்தாள் வேறொருவள்!
கலங்கினாள்!
வெந்த புண்ணில் வேல் பாய்ந்த வேதனையில் ,கிழிந்த மேலாடையை சரி செய்தவாறு தடுமாற்றத்துடன் எழுந்தாள்!
ஊருக்குள் இவளை நுழையவிடக்கூடாது
ஏக "பத்தினி" ஒருவள் கூறினாள்!
ஆமாம் ஆமாம் இவள் ஊருக்குள் வரக்கூடாது!
ஒன்றாய் கோசம் இட்டனர்!
இரு காதுகளையும் தன் இரு கைகளால் பொத்தினாள்!
தீயனும் கொடுமையான அவர்களின் வார்த்தை தன்னை அவமதித்தாள்!
அவள் மீது சிலர் கல்லெறிந்தனர்! மற்றும் சிலர் இரு கைகளில் மண் வாரி அவள் மீது தூற்றினர்!
எங்கிருந்தோ பறந்து வந்த ஒரு கல் அவளின் நெற்றிப்பொட்டில் பட,
"ஆ" வென்று கதறியவாறு மயங்கி கிழே விழுந்தாள்!
சிறிது நேரத்திற்க்கு பிறகு கண் விழித்தாள்! தலையில் கட்டுடன் மிகப்பெரிய ஆடம்பர மாளிகையின் ஓர் உள் அறையில் தான் படுத்திருப்பதை அறிந்தாள்!
திடுக்கிட்டு மெல்ல எழுந்தாள்!
நான் எங்கிருக்கிறேன் என்று வினா எழுப்ப, சற்றே வயதான ஓர் பெண்மணி அவளை நோக்கி
"பயபடாதம்மா" நல்ல இடத்துக்கு தான் வந்திருக்க!, என்று கூறியபடி ,அன்புடன் அவள் தலையை வருடிவிட, மெல்ல தலை சாய்ந்து உறங்கினாள்!
சில நாட்கள் சென்றன!
நலமோடு எழுந்தாள்!
வயதான பெண்மணியிணை நோக்கி இரு கைகள் குவித்து வணங்கினாள்!
எனக்கு செய்த இந்த உதவியை என் வாழ்நாள் முழுதும் மறக்க மாட்டேன்! என்று கூறி கண்ணீர் மல்கினாள்!
அழாதேம்மா! கண்ணீர் துடைத்தாள்! அந்த வயதான் பெண்மணி!
இரு கை குவித்து தம் உயிரை காப்பற்றிய வயதான பெண்மணியை தொழுதாள்!
நான் போகிறேன் என்றாள்!
வயதான் பெண் "கல"-"கல" வென சிரித்தாள்!
தா! கொஞ்சம் நில்லு!
என்னை என்ன கேணச்சினு நினைச்சியா?
ரோட்ல கிடந்த உன்ன எவ்வளவு பணம் செலவு பண்ணி காப்பாத்தினேன்!
நீ பாட்டுக்கு போறேங்கிறியே? ம்ம்ம்ம்.....?
இவள் "திரு-திரு" வென விழித்தாள்!
வயதான பெண் கைதட்ட,
இரண்டு முரட்டு ஆண்கள் அந்த அறைக்குள் பிரவேசிக்க,
அவர்களை நோக்கி ஆணை இட,
அவள் "கதற-கதற" இழுத்துச்சென்றனர்!
ஓர் பாதாள அறையினுள் தள்ளி சிறையிட்டனர்!
அவளின் கதறல் அந்த அறையின் நான்கு சுவர்களுக்குள் அடங்கிப் போனது!
கதறியதால் உண்டான களைப்பாள் மயக்கமுற்றாள்!
முகத்தில் "சுரீர்" என்று தண்ணிர் பட,
"திடும்" என்று கண் விழித்தாள்!
எதிரே வயதான அதே பெண்மணி!
தனது கையில் இருந்த ஆடைதனை அவள் முன் தூக்கிப்போட்டாள்!
இந்த ஆடைதனை மாற்றிக்கொண்டு வா!
உனக்கு இன்று இரண்டாவது சாந்தி முகூர்த்தம்!
என்னை விட்டுவிடு! நான் எங்காவது போய்விடுகிறேன்!
எழுந்தாள்!
அவளை கடந்து ஓரடி முன் வைத்தாள்!
வயதான பெண்மணி ஓங்கி அவள் கன்னத்தில் ஓர் அறை கொடுத்தாள்!
அடிபட்ட பாம்பாய் சுருண்டு தரையினில் விழுந்தாள்!
மயிலே!மயிலே! இறகு போடு என்றால் போடாது!
அடித்தால் தான் போடும்!
கிழே விழுந்து கிடந்தவளின் தலைமுடியை கொத்தாய் தம் கரத்தினில் பற்றி "தர-தர" வென அறையினின்றும் வெளியே இழுத்துச்சென்றாள்!
பெரும் பண முதலைகள் அங்கே கூடி இருந்தனர்!
இவள் அலங்கோலத்திழும் மிக அழகாய் இருக்கக் கண்டு, வியந்தனர்!
புதியவள் வேறு!
பெருந்திரள் பணம் தர வேண்டும்!
"ஈஞ்சுவை" தரம் இவள் வசமாகும்!
வயதான பெண்மணி முன்னுரைத்தாள்!
வந்தவர்களும் முகம் மலர்ந்தனர்!
போட்டி இன்றி அவள் பொதுவில்!
பொன், பொருள்,நவமணிகள் விளையாடின வயதான பெண்மணியின் கரங்களில்!
செல்வச்செழிப்பானாள்!
இவளோ சிறு துரும்பாய் இளைத்தாள்!
வருடங்கள் பல சென்றன!
வதைபட்டவள் தன்னை படைத்தவனிடம் வேண்டினாள்!
இனியும் முடியாது! கொண்டு சென்றுவிடு என்னை!
நாளும் நான் மறவேன் உன்னை!
கண்ணீர் சொரிந்தாள்! கதறினாள்!
இனி இவள் "களர்" நிலம்! பயன் இனி இல்லை!
வயதான பெண்மணி எண்ணினாள்!
புண்பட்டவளை புரட்டித் தள்ளினாள் "நடு" இரவில்!
நரகத்தினின்றும் விடுதலை!
நான் இனி எங்கே போவது? விழித்தாள்!
தளர்வாய் நடந்தாள்!
சிதைந்த மடம் ஒன்றினில் தஞ்சம் புகுந்தாள்!
பட்டினியாய் சில நாட்களை கழித்தாள்!
பச்சிலைகளை உண்டாள்! அதுவே நல்லொரு மருந்தென கண்டாள்!
இளைத்தவள் மீண்டும் பொலிவுற்றாள்!
வண்டி இழுத்தாள்!
கூலிக்கு மண் சுமந்தாள்!
வருவாய் சிறிது செலவிட்டாள்! மடம் புத்து உயர் பெற்றது!
தன்னை போல் ரணம் கண்டவர்களை தேடி கண்டு, முதல் உதவி செய்தாள்!
மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினாள்!
பொது தொண்டில் உயர்ந்தாள்!
ஊர் ஊராய் சென்றாள்!
பெண்களின் நலனுக்கு உழைத்தாள்!
பிறர் இவள் உழைப்பாள் உயர்ந்தனர்!
ஏட்டுக்கல்வி காணாத பாமரர்கள் பனிமலராள் இவளின் சேவையில் புதிய கல்விக்கூடம் கண்டனர்!
சமுதாயமும், ஏன் பெற்றோர்களும் புறம்தள்ளும் உயிர் கொல்லியால் பாதித்த மக்களிடம் தாயன்பு கொண்டாள்!
அவர்களின் துயர் போக்கிட, உடல் நலம் தேற்ற ஆவண செய்தாள்!
கண்ணீர் மல்கினார்! கரம் தொழுதனர்!
இவள் முன் எப்படியோ?
இன்று இவள் நங்கள் கண்ட இறை!
அன்பே நங்கள் ஓதும் மறை!
இப்படியாக...
இதோ இன்றும் ஒரு ஊரில் இவளின் மேடை முழக்கம்!
சமுதாயத்தின் பார்வையில் நானொரு சாக்கடை!.
வறுமையின் பிடியனில் . . . . . . . . . . . . . . .
கதை
சேலம் நீலா துரை சுரேஷ்
+91 9444148503