தன்வினை
தலை தெறிக்க ஓடினான்!
ஏதோ ஒன்று தன்னை துரத்துவதாக கற்பனை!
விடியும் பொழுது எப்பொழுது? தெரியாது?
தன் நிலை மறந்தான்!
உயிர் ஆசையில் பின்னங்கால்கள் பிடறியில் பட,
ஓடினான் !
ஓடிக் கொண்டே இருந்தான்!
அவன் விழிகளில் மரணத்தின் பயம்!
அவனின் எண்ண அலைகள் பின்னோக்கிச்சென்றன!
இத்தனை நாட்களாய் நான்
ஆயுதம் ஏந்தி,எத்தனையோ பேரை வீழ்த்தி,
இரத்தம் ஆறாக, இலட்சங்கள் கண்டு "தாதா" வாகி
அரசியல் தலைவரின் வலக்கரமாய், அவரின் ஆணை கண்டு,செயல் ஆற்றி,
எம்"பவச்"செயல்தனில் அவர் குளிர் காய,
செய்த "கொலைகள்" ஏராளம்! ஏராளம்!
நன்றிக்கடன்பட்டவன் நான் அவர்க்கு!
ஆளுமை பதவி கொடுத்தார்! ஆட்டம் கொண்டேன்!
கண்ணில் பட்ட நிலங்களை கையாடல்படுத்தினேன்!
"மாமுல்" கண்டு, மலைத்தேன்! நான் அங்கு!
மலர்கள் தினம் என் மஞ்சத்தில்!
உல்லாச வாழ்கை!
இது தான் "சுவர்க்கம்" என்றேன்!
ஆட்டம் கலைந்தது!
ஆட்சியும் மாறியது!
வன்முறையாளன் இவன்யென ஒரு குரல்!
அடித்து நொறுக்குங்கள்! இன்னொரு குரல்!
கோபத்தில் என் கண்கள் சிவக்க,
நான் யார் தெரியுமா? என் சொல் அடங்கும் முன்னே
நீ யாரென்று அறியாமலா?
உன்னால் விழ்ந்தனர் பலர்!
பாவி நீ!
மாங்கல்யம் இழந்தனர் சிலர்!
சீர் கொண்ட நாட்டை சீர் குலைத்த "களை" நீ!
கொல்வதே உன் "கலை"!
சொல்லிவிடு பிறருக்கு! இன்றோடு முடியும் உன் கதை!
யார் நீ? எங்கிருந்து பேசுகிறாய்?
அவனைச் சுற்றி சிரிப்பலைகள்!
விகரமான அறைகூவல்கள்!
கோபம்கொண்டான்! கையிலே ஆயுதம் எடுத்தான் !
கண்ணில் கண்டவைகளை அடித்து நொறுக்கினான்!
தனிமை இருளில் தான் மட்டுமே!
அவன் அறியா பித்துநிலை கொண்டு பிதற்றினான்!
தலை தெறிக்க ஓடினான் !
ஏதோ ஒன்று தன்னை துரத்துவதாக கற்பனை !
கதை
சேலம் நீலா துரை சுரேஷ்
+91 9444148503