காமத்தின் ஆட்டம்
சந்துகளில் பொந்துகளில்
நடந்தேறியக் களியாட்டம்
சுத்தமின்றி நித்தமிங்கு
வீட்டுக்குள்ளே வேட்டையாட்டம் !
பெற்றபிள்ளை என்றால்என்ன
பேரப்பிள்ளை என்றால்என்ன
குற்றமென்று அறிந்தாலும்
வீட்டிற்குள்ளே வெறியாட்டம் !
கட்டியவன் சின்னவீட்டின்
கட்டிலிலே பெருங்கூத்து !
கட்டியவள் சொந்தவீட்டில்
கள்ளக்காதல் விளையாட்டு !
பல்லில்லாத் தாத்தனுக்கும்
இங்கிலீசு முத்தம்வேண்டும்
பால்குடிக்கும் பிள்ளைக்கூட
காமத்தால் பலியாகும் !
பெற்றெடுத்தப் பிள்ளையையும்
கூட்டிக்கொடுத்துப் காசுப்பார்க்கும்
வெட்கம்கெட்ட வெறிநாய்கள்
வாழ்ந்துவரும் நரகயுகம் !
கூடப்பிறந்த சகோதரங்கள்
கூடப்படுக்க அலைகின்ற
முறையற்ற கறைப்பட்ட
காமுகர்கள் வாழும் யுகம் !
வீட்டிற்குள்ளே இந்த ஆட்டம்
போடுகின்ற வெறிக் கூட்டம்
வீடு தாண்டி வெளியில் வந்தால்
என்ன ஆகும் பூமித்தோட்டம் ?
காமத் தீயில் உலகை கருக்கி
களியாட்டம் போடும் கூட்டம்
முகத்தில் காரி துப்ப வேண்டும்
கண்டுபிடித்து கொல்ல வேண்டும் !