உடன்பிறந்தவள்@
உன் தாய்க்கு மரணவேதனை
உனக்கோ ஜனனவேதனை
நீ பிறவி எடுப்பதற்கு
உன் தாய் எடுத்த இந்த மறுபிறவி
உன்னை காண்பதற்காக மட்டும் தான்……
மறுபிறவி எடுத்த மாத்திரத்தில் - அவள்
வாழ்ந்த வாழ்க்கை, வாழும் வாழ்க்கை,
வாழ போகிற வாழ்க்கை
உன்னை வாழ வைப்பதற்காக மட்டும் தான்……
நீ உருவான முதல் - இந்நாள்
வரை அவள் இருதயம்
உன் இருதயத்திற்காக துடித்தது!
அவளை நீ ஒதுக்கும் போது
அவள் இருதயம் வெடித்தது!!
அவளுக்கு ஏற்படும் இந்த மனவேதனை
அந்த மரணவேதனையைவிட கொடியது!!!
எல்லோருடனும் ஒருத்தி பிறக்கிறாள்
இந்த உடன்பிறப்பு.