அம்மன் கொடை விழா ...!!

சாமியாடி முக்காணி முக்கு
தீர்த்தமாட போயாச்சு ....
கொட்டு சத்தம் கேட்டுருச்சு ....!

அம்மன் கொடை கொடுக்க
ஊரு சனம் கெளம்பிருச்சு ...!

கோடியுடுத்தி
பின்னல் சடையில்
பிச்சிப்பூ சூட்டி
நகை நட்டு பூட்டி
தேங்காப் பழ தட்டெடுத்து
குடும்பத்தோடு வாரயில ....

ஆக்ரோசமா ஆடியே
சாமியாடி குறிசொல்ல ....

பம்பையோடு உடுக்கையும்
உச்சத்திலே சேர்ந்தொலிக்க ....

சுடலைமாடன் பேச்சியம்மா
கம்பீரமா பார்த்திருக்க .....

பத்ரகாளியோட சந்தனமாரி
உடனமர்ந்து அருள் வழங்க .....

கேரளத்து செண்டை மேளம்
எடுப்பாகத் தான் ஒலிக்க ....

அம்மன் கொடை கொடுத்தாச்சு ....
அம்மன் உள்ளம் குளிர்ந்தாச்சு ....!!!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (3-Sep-13, 7:33 am)
பார்வை : 717

மேலே