மூன்று மதங்களின் புனித இடங்கள்
தேவாலயத்திற்கு வாருங்கள்... உன்
தேவைகளை நிறைவேற்றுவார்..!
கோயிலுக்கு வாருங்கள்... உன்
கோரிக்கைகளை நிறைவேற்றுவார்..!
மசூதிக்கு வாருங்கள்... உனக்கு
மனநிம்மதியை தந்திடுவார்..!
இயேசுவை வணங்கிடு... பிறரின்
இதயத்தை மகிழ வைத்திடு..!
சிவபெருமானை வணங்கிடு... பிறரை
சிரிக்க வைத்திடு..!
அல்லாவை நினைத்திடு... பிறரிடம்
அன்பாக இருந்திடு..!
மதங்கள் வேறுபட்டது...
மனஉறுதியில் இந்தியா ஒன்றுபடுவது..!
உழைப்பில் இந்தியாவுக்கு தேவை
மூன்று மதங்கள்..!
உலகளவில் இதுவே வெற்றியின் வழிக்காட்டிகள்..!