தமிழீழத்தில் மீண்டும் முரசொளி
டூம்,,,டூம்,,,டூம்,,,டூம்,,,டூம்,,,
டூம்,,,டூம்,,,டூம்,,,டூம்,,,டூம்,,,
கேளடா தம்பி கேளடா
என்ன,,, என்னய்யா கேட்க
கேளடா தம்பி கேளடா
மீண்டும் நம்தேசத்தில் ஆ,,,ஆ,,,ஆ,,,,,,,,,,,
என்னய்யா மீண்டும்
கேளடா தம்பி கேளடா
மீண்டும் நம்தேசத்தில் புலிகளின்
போர் முரசொளி கேட்குது கேளடா
ஆமாம்,,,ஆமாம்,,அதற்கென்ன இப்போ
எழுடா தம்பி எழுடா
களமாடச்செல்வோம் போர்களத்திற்கு
சிங்களவனை அடக்கிடவே
ஐயோ,,, ஓடுங்கய்யா ஓடுங்க
வீட்டினுள்ளே ஓடுங்க
அடேய் முட்டாலே
எமினத்தின் எமனடா நீ
போர் முரசொளி கேட்கிறது
போர்களத்திற்கு போகச்சொல்லுமென்றால்
வீட்டினுள்ளே போகச்சொல்கிறாயே
முட்டால்
ஆமாம்,,,ஆமாம் நானே முட்டால்
போர் முரசின் திசையோடுச் சென்று
எனுயிரை இழக்க நானென்ன முட்டாலா
ஓடும்,,,ஓடும் வீட்டினுள்ளே ஓடுங்கய்யா
அடேய் கேளடா,,,,,,
எனுடல் நரம்புகள் தளர்ந்துள்ளது
உயிர் நாடிகள் குறைந்துள்ளது
தசைகள் மெளிந்துள்ளன
கண்களின் பார்வை மங்கியுள்ளது
கை கால்கள் நடுங்கிட்டது
இவனைத்தும் இன்று மாறியுள்ளன
ஆனால் அன்று முதல் இன்று வரை
என் குருதியில் கொதிக்கும்
தமிழீழ தாயக தாகத்தின்
தாகம் குறையவில்லையடா
உன்போல் அடிமையாயிருப்பதைவிட
நடுங்கும் கால்களுடன் கரும்புலியாய்
சென்று சிங்களவனின் படைதளத்தை
தகர்திடுவேனடா,,,,,,,,,,,,
"புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்"
புலிகளே இங்கொரு கரும்புலியுள்ளேன்,,,,,,,,,,,,,,
அய்யா,,,அய்யா,,,நில்லுமய்யா நில்லும்
இக்கிழவனின் குருதிக்கொதிப்பை
உணர்ந்ததும் கசிகிறது என் குருதி
கண்ணிலிருந்து
அய்யா இன்று உங்களின்
நரம்பு தளர்ந்து நாடிகள் குறைந்தும்
இறுதி நாடியின் காலமறிந்தும்
களமாடச்செல்வோறே - இனி
எனிறுதி நாடியுள்ள வரை
தமிழீழத்திற்காக நான் போராடுவேனய்யா,,,,,,,,,,,,,,,
"புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்"
ஓடுங்கள்,,,ஓடுங்கள் போர் முரசின்
திசை நோக்கி ஓடுங்கள்
"புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்"
"புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்"
"புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்"
=== க.பிரபு தமிழன்