புரிகிறதா மனிதா!..

ஒடைந்த பின்னும்
ஒவொரு சில்லும்
பிரதிபலிப்பதை நிறுத்தவில்லை கண்ணாடியில் !

ஒடிந்தத கிளையிலும்
வேர்க்கால்கள் பிறக்கத்தான் செய்கிறது..

அறுவடை செய்த வயல்வெளியிலும்
வேர்விட்டு புறப்படுகிறது
புதிய செடிகள் ..
வெளிச்சத்தை தின்று
வெளிப்படும் இரவும்
விடியலைக் கண்டதும் வெருண்டு
ஓடத்தான் செய்கிறது..

ஒரு முடிவில்
இன்னொரு ஜனனம்..

பாறையையும் துளைத்து
வெளி வருகிறத்
புல்லின் நாற்றுக்கள்..

புரிகிறதா மனிதா!..
முடிவெல்லாம் முடிவல்ல..

வாளேந்தி நிற்பது
யார்ரென்று பார்க்காதே.
வரிப்புலி நானென்று உறுமு

தொலையாதது எனது நம்பிக்கை என்று சொல்..
வெற்றிக்கு முகவரி
என்றும் நீதான்..!

எழுதியவர் : ந.ஜெயபாலன்,திருநெல்வேலி-6 (3-Sep-13, 5:57 pm)
பார்வை : 58

மேலே