உற்றுநோக்க வெற்றிடமாம் : தன்னிலை விளக்கம்

காசுசேர்த்து கலைப்போரே...
காசிறைத்து களிப்போரே...
ஊனைவிற்று உண்போரே...-வெறும்
ஊனையுற்று காண்போரே...
அண்டமெல்லாம் அலைவோரே..வெறும்
பிண்டமென பிழைப்போரே....
தரையாள துடித்தோரே..
தன்னிலை மறந்தீரோ....!

====================================
அவசரத் தேவையே
அடிப்படை வாழ்வென
உவகையை தொலைத்தே
உயிர்நாட்களை இழந்தீரே....
ஜன்னல் வழிவந்த
தென்றல் போதாதென
வீட்டையும் இடிப்பீரா-மாளா
வேட்கை வேந்தர்களே....

====================================
வெற்றிகாணும் வீரனுக்கும் அவனைப்
போற்றிவாழும் ஏனையருக்கும்-தன்னை
உற்றுநோக்க நேரமின்றி
பற்றிவாழப் பழகியதே ஒற்றுமை...

உற்றுநோக்க வெற்றிடமாம் ஆனால்
உண்மையெல்லாம் உரைத்திடுமாம்
சற்றுநேரம் தினமொதுக்கிப் போனால்
உன்னிலையை உணர்த்திடுமாம்...

====================================

எழுதியவர் : காசி. தங்கராசு (4-Sep-13, 3:39 am)
பார்வை : 79

மேலே