துஞ்சும் நெருப்பு சில வெண்பாக்கள்

கஞ்சம் எனமலர்ந்தக் காரிகையாள் கண்மலர்கள்
அஞ்சித் துடிக்கும் அதிசயத்தைக் -கொஞ்சம்
நெஞ்சில் நிறுத்தி நினைவில் மயக்கத்தில்
துஞ்சுவது காதலெனும் நெருப்பு.
** ** **
தேயிலைக் காட்டில் தினமுழைக்கும் ஏழைகள்
வாயிருந்தும் ஊமைபோல் வாழுகின்றார்-ஆயினும்
நாயிலும் கீழாய் நடத்துகின்ற செல்வந்தப்
பேயினமோ பேசும் பிரித்து.
** ** **
சிறகு முளைக்காமல் கூட்டில் இருக்கும்
பறவை பறக்கத் துடிக்கும்-பிறகு
உறவைக் கொடுத்திட்டத் தாயின் வழியில்
திறமை வளர்க்கும் முனைந்து.
** ** **
நெல்லு விளையும் நிலமெல்லாம் இன்றெங்கும்
புல்லும் முளைக்காத கட்டிடமாய்.-மெல்ல
உருமாற்றம் கொண்டிட்டால் நாளை உணவு
வருமோ?வழியென்ன சொல்?

** ** **

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (5-Sep-13, 1:52 am)
பார்வை : 64

மேலே