எழுந்து வா தமிழா

புழுதி காடான
பூமியை
பூக்க வைத்தோம்..!

வேரிழந்த
மண்ணை..!
வேர்வையால்
உயிர்ப் பித்தோம்..!

உறவாகவும்
உயிராகவும்
உடன் இருந்த
மண்ணில் வாழ
உரிமை இல்லை..!

புலித்தோல்
போத்தி
போராடினோம்...!
தாய் மண்ணில்
வாழ..!

வரிசை கட்டி
தோல்
உரித்தார்கள்
எலும்பிலும்
ரத்தம்
வழிந்தது...!

எம் குல
பெண்கள்
சிங்கள
கழுகுகள்
கால்பட்டு
கண் முன்னே
கற்பை
இழந்தனர்..!

போராடிய
எம் தலைவனை
பொய் சொல்லி
போர் மரணம் என்று
வேஷம்
கட்டினார்கள்...!

கண்ணீராலும்
ரத்ததாலும்
ஆடை
அணிந்த
எம் பூமி...!
கயவன்
கைக்குள்ளே
சிறைப்பட்டு
கிடக்கிறது..!

தமிழ் மண்
இழந்து
கண்ணீரோடு
கரையேறி
வருவோரை
அகதி என
பிரித்து பேசி
மறுபடியும்
உயிர் நோக
செய்யாமல்..!

தமிழனாக
கண்துடைத்து
கை கோர்ப்போம்
எழுந்துவா தமிழா...!

*****கே.கே.விஸ்வநாதன்*****

எழுதியவர் : கே கே விஸ்வநாதன் (4-Sep-13, 10:58 pm)
பார்வை : 168

மேலே