பொறுமையின் சிகரம்
ஒன்றை நினைத்து போராடுவதென்றால்
அதனைத் தேடி அலைவதென்றால்
மண்ணில் மாறா உறுதியோடும் நம்பிக்கையோடும் மகாத்மா காந்தியைப் போல ,பகத்சிங்கைப் போல
நாம் அவத்ரிப்போமே பொறுமையோடு....!
துன்பமும் துயரமும்
நமக்கு மட்டுமே என்றால்
மண்ணில் மண்ணாய் துளைத்து முட்டி மோதி
வெளியே வரும் விதையின் முயற்சி மட்டும் வலிக்குமோ?அதற்கும் துன்பமில்லை துயரமில்லையே....
உலகம் இருண்டு விட்டது என்று
ஒரு மூலையில் முடங்கிக் கிடந்தால்
முட்டையின் உள்ளேயிருந்து தன் சிறு
மென் அலகால் கொத்திக் கொத்தி
உலகத்தைக் காண வெளி வரும் கோழிக் குஞ்சிற்கும் மட்டும் வலிக்குமோ?
அதற்கு துன்பமும் துயரமுமில்லையே....!
வானம் தொட நினைக்க வேண்டும் என்றால்
கூனிக் குறுகி சோம்பி ஓய்ந்திருந்தால்
கூட்டுப் புழுக்கள் வாய்க் குறுகிக் கிட்ந்து
வண்ணச் சிறகுகள் முளைத்துப் போராடிப் போராடி
வானில் பறக்கும் வண்ணத்துப் பூச்சிகளுக்கு வலிக்குமோ?அதற்கும் துன்பமும் துயரமும் இல்லையே...!
மானிடா..!புரிந்துகொள்ளுங்கள்
இவர்களின் நிலை ..யார் உதவியும் இன்றி
தானே முயற்சித்து பொறுமையோடு
வெற்றி காண்கிறதே ...!
நாம் விதைகள் கோழிக் குஞ்சுகள் வண்ணத்துப் பூச்சிகளிடம் தினந்தோறும் கற்றுத் தெளிவோமே பொறுமை யுடன் வாழ்வது எப்படி என்று..?