மௌன இரவுகள்

*ஓசைக்கு பதில்
மௌனங்களும்,
மயக்கங்களுக்கு பதில்
மறுப்புகளும்,
கண் அசைவிற்கு பதில்
ஒதுக்குதலும்,
ஆசைக்கு பதில்
அதிகாரங்களும்,
நிறைந்து தான்
போயின.

*இரவுகளின்
உறக்கங்களில்
உன் அசைவிற்காய்
நானும்,
என் அணைப்புக்காய்
நீயும்
காத்திருந்து
ஏமாந்த போது
ஒன்று மட்டும்
உரைத்தது.
ஏமாந்தது
நீயும் நானுமல்ல
என் கணவா!
நம் காதலும் தான்.

*விடிகாலை வேளையில்
குளிருக்கு நடுவினிலே
அசையும் உன் உதடுகளில்
என் பெயரை தேடுகிறேன்!

*கடுகின் ஓசையும்,
கரண்டியின் இசையும்,
கோப்பு தேடும் பரபரப்பும்
நமக்கிடையே பாஷையாய்!

*சில நேரம்
நன்றாகத்தான்
இருக்கிறது.
தாளங்கள்
மாறாதவரை!

எழுதியவர் : ranibala (4-Sep-13, 10:09 pm)
பார்வை : 135

மேலே