சுமைதாங்கி

...சுமைதாங்கி......

எனதன்பு தோழியே......!
வார்த்தைகள் வசப்படவில்லை,
உன் வாட்டத்தைப் போக்கிட......
சோதனைகளை நீ பட்டியலிட,
வேதனைகளில் விக்கித்து நிற்குது மனம்....
எண்ணங்களில் ஊடுருவும் ஆறுதல் மொழிகள்,
எடுத்தியம்புமுன் வழுக்குகின்றன உன் கண்ணீரில்....
ஆயிரமாயிரம் ஆறுதல் வார்த்தைகள் அடுக்கடுக்காய்
வரிசையில் நின்றாலும் வசமிழந்து தான் போகின்றன
உன் மௌனமான கதறல்களின் சிதறல்களில்....
தோள் சாய்ந்திடு தோழி.....
ஆனமட்டும் அழுது தீர்த்திடு....
என் அணைப்பினில் அடங்கிடு....
உன் சோகங்களை இறக்கிடு...
சுமைதாங்கியாய் நானிருக்கேன்....
பாசத்துடன் நீளும் கரங்களை,
இறுகப் பற்றிக் கொள்..... உன்
அனைத்து துயரங்களையும் என்
தோள் மீது ஏற்றி உன்னை விடுவிக்கின்றேன்
இந்தத் துன்பச்சிறையினில் இருந்து............!

====================================

எழுதியவர் : மகேஸ்வரி பெரியசாமி (5-Sep-13, 9:07 am)
பார்வை : 291

மேலே