இளைஞர்களின் வாழ்க்கை

பொய் முகங்கள் பார்த்து
ஊமையாகிப் போனது
அரசியல்வாதியின்
நான்கு சக்கர ஒலிவாங்கி ...!

உப்புக் கண்ணீர் வடிக்கின்றது
ஏழை வீட்டு மண் குடிசையும்
மண் சட்டிப் பானையும்...!

பிணங்கள் வாழும் மண்டபம்
அரண்மனையானது
அரசியல்வாதியின்
கைவண்ணத்தில்...!

உயிருள்ள மலர்கள்
ஊமையாகிப் போனது
அரசியல் வாதம் பண்ணும்
அரசியல்வாதி ஆட்சியில்...!

பொதி மூட்டை சுமப்பவன்
சொர்க்கத்தில் நிம்மதியாக....
பெரும் பாவ மூட்டை சுமப்பவன்
நரகில் நிம்மதியில்லாமல்...!

தன்னம்பிக்கையையும்
அனைத்து உரிமையையும்
பசிபட்டினி வாழ்வையும்
சுமக்கின்றனர் பாதை தெரியாப்
பசுந் தளிர்கள்(இளைஞர்கள் )
அரசியல்வாதியிடம்....!!

எழுதியவர் : தயா (6-Sep-13, 10:33 pm)
பார்வை : 97

மேலே