தமிழினக் கடவுள்கள் யார்???
குழந்தையே பேதமையால்
அப்பா அம்மா கடவுள் யாரென்றது
பெற்றோர்களோ - அடி என் கண்ணே
கடவுள்கள் ஆகாயத்திலிருந்து
தோன்றியவர்களென்று நீங்களும்
அக்குழந்தையைப்போல் பேதமையாயுள்ளீர்களே
என் அன்பு பெற்றோர்களே
இனியும் பிழைக்க வேண்டாம்
கூறுங்கள் பிள்ளைகளிடம்
அடி என் செல்வங்களே
கடவுகளென்பது
நம் முன்னோர்களென்று
தன் வாழ்நாள் முழுவதையும்
தம்மக்களுக்காகவும் இனத்திற்காகவும்
வழிநெறி மாறாமல் சுயநலமற்று
நீதி தவறாமல் ஆட்சிபுரிந்த
மன்னர்களையே மூலக்கடவுளாகவும்
அம்மன்னரின் தளபதிகளும்
போராளிகளுமே காவல் தெய்வங்களென்று
சொல்லுங்கள் பெற்றோர்களே
அவ்வாறு வாழ்ந்த
அனைவரையும் நம்தமிழினத்தின்
கோவில்களில் காணலாம்
கடவுள்களாக சிலைவடிவிலென்றும்
ஆரிய முடர்களைப்போல்
சாத்திரமில்லை நம்தமிழினத்தில்
மாறாக கவிப்பாடல்களும்
கோவில்களுமுள்ளது
நம் வரலாற்றையும் அறிவியலையும்
அறிந்து உணர
அக்கால கடவுள்களைப்
போற்றினால் இக்கால
கடவுளை வணங்குவரே
சினம் கொள்ளவேண்டாம்
சற்று சிந்தியுங்கள்
எம்மக்களே ஆரியனும்
நாமுமொன்றல்லை
ஆரியர்கள் கடவுளையும்
நடைமுறையற்ற சாத்திரங்களையே
தொழுவர் தமிழர்களே
வரலாற்றையும் மொழியையுமே
தொழுபவர்கள்
தமிழினத்தின் கடவுள்களான
முருகன், ஊர் காவல் தெய்வங்கள்,
கண்ணகி, அகத்தியன்,,,,,,,
இவர்கள் யாவரும் ஆரிய
சாத்திரங்களைப்போல்
வானிலிருந்தே பூமியைப்பிளந்தே
தோன்றவில்லை அனைவரும்
இம்மண்ணை ஆண்ட மன்னர்களும்
தளபதிகளும் போராளிகளும்
புலவர்களும் அறிவியல்
வல்லுனர்களும் தான்
சிலைவடிவங் கொண்டுள்ளனர்
நம் கோவில்களிலென்று
கோவில்கள் கடவுளுக்கில்லை
அது மக்களின் வாழ்விடம்
நமினத்தின் அறிவியல்
வாழ்வியல் அரசியல்
சுவடிகளின் களஞ்சியம்
ஆளும் "கோ"-வின் வாழ்விடமடா
தமிழினத்தின் கோவில்களை
ஆரியர்கள் வழியில் காணாமல்
நம்தமிழின மரபில்
ஒவொரு கற்களை கூர்ந்து
அவதானியுங்கள் அக்கற்கள்
உங்களுக்கு அண்டத்தையையே
காண்பிக்கும் வின்களமில்லாமல்
அனைத்து சிலைகளும் நம்
முன்னோற்களின் உருவங்களுடன்
நமின வரலாற்றையும் கூறுமடா
இனியும் நாம் பிழைக்க வேண்டாம்
எம் தமிழ் மக்களே நமினத்தின்
வரலாற்றை இழந்தது போதும்
இனியுமிருப்பதை பாதுகாக்க
இன்றைய தலைமுறையினரை
தெளிவுபடுத்துவோம்
=== க.பிரபு தமிழன்