பாரதி எழுதியதில் ஒரு திருத்தம் - ஆற்றுமணல்
காவிரி, தென்பெண்ணை, பாலாறு - தமிழ்
கண்டதோர் வைகை, பொருணை நதி
என மேவிய ஆறு பல ஓட
"திரு மேனி செழித்த தமிழ்நாடு "
இது பாரதி பாடியது அந்நாளில் - ஆனால்
இன்று அவன் இருந்திருந்தால் அவன் கவிதை
வரிகளை அவனிடம் காட்டி ஒரு வரியை மட்டும்
திருத்தச் சொல்வேன் - அது .... அந்த கடைசி வரி
" மணல் வாரி அழித்த தமிழ்நாடு "
விளைவு ....
"திரு மேனி சிதைந்த தமிழ்நாடு" ஆனது