சிரிப்பு ஒரு சிறந்த வரம்

குபீரெனக் கோபப் பட்டால்
குறையுமடா வாழ்நாள்

பளீரென சிரித்து விடு
பளிச்சிடட்டும் இந்நாள்.....!

வாழ்வது ஒரு முறை
வருத்தங்கள் எதற்கு......?!

சிரித்திடு பல முறை
சிக்கனம் எதற்கு..........?!

பைத்தியம் என்றே
பார்ப்பவர் சொல்லட்டும்....!

புன்னகை வரத்தை
போவென்றே சொல்லட்டும்...!

கொல்லென சிரிக்க
கொடுத்து வைக்கோணும்...

கொல்லெனக் கவலையை
கொன்று மகிழவே....!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (8-Sep-13, 10:08 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 77

சிறந்த கவிதைகள்

மேலே