+புயலும் புயலால் பிறந்த மழையும்!+
வயலை குளமாக்கி
பலரின் உள்ளத்தை
இரணமாக்கியது!
மலையைத் தள்ளிவிட்டு
பலரின் உள்ளத்தை
கனமாக்கியது!
கடலைச் சீண்டிவிடு
பலரின் உடலை
வாடவைத்தது!
வீட்டை உடைத்துவிட்டு
வீதியில் உணவை
தேடவைத்தது!
விதியை நொந்து
கவிஞர் பலரை
பாடவைத்தது!
ஏழை பணக்காரன் பார்க்கவில்லை!
மேதை ஏமாளி பார்க்கவில்லை!
காடா நாடா பார்க்கவில்லை!
எல்லா இடத்தையும்
சமமாய் நடத்தியது
புயலும்
புயலால் பிறந்த மழையும்!