கணபதியே ! கணபதியே!!

(முன் குறிப்பு : இது யாரையும் புண்படுத்தும் கவிதை இல்லை )

கணபதியே கணபதியே –உன்
காதுல சேதியொன்னு
சொல்லட்டுமா ?

சங்கடத்தை தீர்ப்பெயன
சொல்லுறாங்களே -உனை வச்சி
சங்கடத்தைதானே கொடுக்குறாங்களே

கணபதி டிங் டிங் ன்னு
ஊர்வலம் -எப்போ
கலவரம் டிக் டிக்ங்கிறது
நிலவரம்

வினை தீர்க்கும்
விநாயகனே -உனை
விளம்பரபடுத்தி வினையைத்தான்
கொடுக்கிறாங்களே !

யானை முகத்தோனே !
மதம்ன்னு சொல்லுறாங்களே
மதம் பிடிச்சு –எங்கள
வதம்பண்ணி கொல்லுறாங்களே

உன்னை
சிலை வடிச்சா
கொழக்கட்டையால படைக்கிறாங்க
உன்னை
புறக்கணிச்சா
கொள்ளிக்கட்டையால அடிக்கிறாங்க

உன்னை
தலயல தூக்கி
ஆடுறாங்க –எதுக்கு
கடல்ல தூக்கி
வீசுறாங்க

நா ஆத்திரப்பட்டு கேட்டா -நீ
நாத்தீகமா ன்னு
ஆத்திரப்படுறாங்க -சகலமும்
படைப்பவனே !
”பகுத்தறிவு ”வை உன்
பக்தனுக்கு கொடு !
பாதுகாப்பை என்
நாட்டுக்கு கொடு !

பக்குவமாய் உன்னை
கும்பிட்டு கேக்குறேன்
காது இருந்தா கேளு ! -இல்லனா
காணாம போயிடு !
எப்போதும் போல ….

---------------இரா.சந்தோஷ் குமார்

எழுதியவர் : இரா. சந்தோஷ் குமார் (9-Sep-13, 10:48 am)
பார்வை : 125

மேலே