+அன்புடன் நட்பு கொள்!+
ஆடையில்லா மனிதன் அரை மனிதன்!
அன்பில்லா மனிதன் குறை மனிதன்!
ஆடையில்லா மனிதனிடம் அன்பு நிறைய உண்டு!
அன்பில்லா மனிதனிடமோ ஆடை நிறைய உண்டு!
சோலையில் பூத்திடும் மலர்களில் மணம் இல்லாவிட்டால் என்ன பயன்?
சோலையில் கூவும் குயிலின் குரலில் இனிமை இல்லாவிட்டால் என்ன பயன்?
துடிக்கின்ற இதயம் நின்றாலும்
கடிக்கின்ற செருப்பு பிய்ந்தாலும் பயனில்லை!
கடலின் அலைகள் நின்றுவிட்டாலும்
உடலின் அலைகள் சுண்டிவிட்டாலும் அழகில்லை!
எத்தனை பூக்கள் மலரும் போதிலும் மணக்கும் பூவிற்கே மதிப்புண்டு!
எத்தனை பறவை வாயசைத்தாலும் குயிலின் இனிமையில் மயக்கமுண்டு!
எத்தனை தான் ஒருவன் உயர்ந்தோன் எனினும் அன்பின்றேல்.....!
மழலையின் குரல் நமக்குத் தரும் அழகு ஒலி!
அது புகட்டும் நமக்கு அறிவொளி!
தலைவனில் குரல் என்ன தான் மேன்மை எனினும்
அன்புடன் கூறினால் பண்புடன் ஏற்கலாம்!
அன்பினைக் காணலாம்
பசு தன் கன்றுக்கு பாலூட்டும் போதும்
அன்னை தன் மகற்கு சோறூட்டும் போதும்
அன்பினைக் காணலாம்
பகலவன் தன் தாமரையை தட்டி எழுப்பும் போதும்
காக்கையன் தன் உறவோனை கத்தி அழைக்கும் போதும்
எனவே மனிதனே!
உன் உறவிற்கு உறவைக் கற்று தந்தவனே!
உரிமையுடன் அன்பை கற்றுத் தா!
அப்போதாவது தீவிரவாத உலகமும்
திமிர்வாத மனிதமும்
சொர்க்கத்தின் கதவினைத்தட்ட
ஆயத்தமாவார்களா எனப் பார்க்கலாம்!