நான் இருந்தால் ................உன்னுடன்

உன்னை உணராமல் எங்கனம் என்னை அறிவாய்
என்னை சேராமல் எப்படி உயிர் கொள்வாய்
உன்னுடன் நான் இருப்பேன் உனக்கே தெரியாமல்
என்னை நீ மறந்தால் உடனே பிணமாவாய்........

என்னை தேடி கொண்டு உன் பயணம் தொடரும்
நான் இல்லை என்றால் உன் மதிப்பு குறைந்துவிடும்
பாதாளமும் நான் பாய்வேன்
பசை என்னும் பெயர் கொள்வேன்
உன்னுடன் நான் இருந்தால் இந்த உலகம்
உன் காலடியில் ...............

நான் இருப்பதே தெரியாது
நான் உன்னுடன் இல்லையென்றால்
நீ மனிதன் கிடையாது
உன்னை வழி நடத்த நிழலாய் நான் தொடர்வேன்
சோகம் நீ கொண்டால் ஒரு தாயாய் உடன் நிற்பேன்
என்னை இழக்காதே இழந்தால் உனக்கு
மதிப்பு இருக்காதே ...............

நான் இருக்குமட்டும் வாழ்க்கை பிடிக்கும்
என்னை தொலைக்க மட்டும்
ஒரு ஜென்மம் தான் எடுக்கும்
நான் இல்லாது போனால் இந்த உலகம் கிடையாது
நான் இருக்குமட்டும் இந்த உலகுக்கு அழிவேது ??

எழுதியவர் : rudhran (10-Sep-13, 5:17 pm)
பார்வை : 162

மேலே