இந்த ஆண்டின் எனது கடைசி கவிதை
சில சந்தோசம்
சில சோகம் என இனிதே
முடிந்தது இந்த ஆண்டு....
arrear வைத்து துவங்கினாலும்
இந்த ஆண்டில் பட்டம் பெற்றது சந்தோசம்...
வெறும் எண்ணங்களாய் இருந்த
என் எழுத்துக்கள் எழுத்தில்
கவிதை வரிகளாய்
பதிந்தது பல தோழர்களை பெற்றது
எனது வெற்றியல் ஒன்று....
வேலை தேடி அலைந்து வேதனை
வேலை கிடைத்து ஆறுதலாய்
அடுத்த ஆண்டில் நல்ல வேலையை எதிர்பார்த்து...
என் மனதோடு போராடிய சில
உணர்வுகள் வெறும் மனபோராடமாய்
என்னுள் அடங்கி போன தமிழில உணர்வுகள்....
படித்து முடித்த பின்னும்
தந்தையின் கையையே
எதிர் பார்த்து நகர்ந்த சில நாட்கள்....
வேலை கிடைத்த பின்பும்
தாய் தந்தையை வேலைக்கு
போகவேண்டாம் என்று சொல்ல
முடியாமல் மனதோடு புலம்பிய நாட்கள்....
என் கிராமத்து திருவிழா
திருவிழாவோடு வந்த சில
தேவையில்ல பிரச்சனைகள்
நண்பனின் திருமணம்
சில நண்பர்களின் வெளிநாடு பயணம்
என சில மறக்க முடியாத நிகழ்வுகள்....
கிராமத்து வாழ்க்கையை இழந்து
நகரத்து வாழ்க்கையில்
ஹோட்டல் சாப்பாடு
ஒரு பக்கெட் தண்ணீர் குளியல்
எந்திர வாழ்க்கை
என கற்றுக்கொண்ட நாட்கள்....
வறுமையில் சில நாள்
வசதியாய் சில நாள்
பேச்சுலர் வாழ்க்கை இனிது இனிது....
பல அனுபவம் இந்த ஆண்டில்
சில புதுமையாய் எதிர்பார்த்து
2011 இனிதே வரவேற்கிறேன்....
என இனிய எழுத்து தோழர்களுக்கும்
எழுத்து ஆசிரியர் மற்றும் அனைவர்க்கும்
ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள்....