2010 போய்விட்டாயா?

காலை பிடித்து அழுகின்றாயே
கலங்கி நான் போகின்றேனே
மீண்டும் நான் பிறப்பேனா
மேற்குலக நாட் காட்டியில்

கண்ணகியின் கடுஞ்சாபம்
கைதூக்கி ஊழ் வினையாய்
ஊழலைதான் ஒழிப்பதற்கு
உன்னைத்தான் அழிக்கின்றதே

சோகம் மறக்க குடியோடு (டாஸ்மாக் )
சொல்லுகின்றார் பத்துக்கு பதிமூன்று
வளர்ச்சித்திட்டத்தின் கோடிகளாம்
வாய்கரிசியின் இது முதலா முடிவா

கோட்டை முதல் குட்டை வரை
குடும்பமாய் குதித்தாலும் - இங்கே
வேட்டை நாயாய் குறைத்தாலும்
விதியை போலதானே நீயும்

தமிழில் செம்மொழி களித்தாலும்
தனியொரு நாட்காட்டி இல்லையென்று
உன்னிடம் கடன் வாங்கி பார்த்தேன்
ஒரு மூலையில் அது இருந்தாலே

நீ தேவைதானா என் போய்விடு
நெஞ்சு பொறுக்க வில்லையே
பேருந்து கட்டணம் எல்லாமே
பெருகியது வளர்ச்சி என்றால்

கட்டுமான பொருட்களெல்லாம்
கடைசியில் நின்றது குறைவாய்
உன்னால்தானே என்றால் இந்த
உலகு நம்ப வேண்டுமே

காய்கறிகள் நெருப்பால் வெந்ததெல்லாம்
காலத்தால் மாறித்தான் போச்சு
எரிவாயு விலை ஏற்றத்தாலே
எங்கள் வயிற்றில் கொதிக்குது பாரேன்

நடிகைகள் இல்லையென்றால்
நாங்கள் தூக்கு மாட்டி செத்திருப்போம்
தூக்கிபோட்ட அவர் துணியுடுத்தி
தொலைத்தோமே எங்கள் மானம்

கல்விதான் குறும் செய்தியாய்
கைபேசியில் வந்ததாலே பிள்ளைகள்
காதலைத்தான் தவறாமல் படித்து
கல்லூரி தேர்விலும் தோற்கின்றனரே

இன்னும் எத்தனையோ காரணங்கள்
எடுத்துசொல்லி எப்படி நான்
உன் போகும் உயிரை தடுப்பேன்
உயிருள்ள நானோ சொல்ல போனால்

தமிழ்த்தாயின் கண்ணீரை எடுத்து
தாகமுள்ள உன் உயிருக்கு கடைசியாய்
"என் நாளும் எண்ணப்பட்டு இருப்பதால் "
இயற்கை வழியில் உனக்கு விடுவேனே !

எழுதியவர் : . ' .கவி (31-Dec-10, 6:12 pm)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 413

மேலே