+அம்மா பொண்ணு!+
இரண்டு வயது மகளுக்கு
அம்மா தோசை சுட்டு
சாப்பிடக்கொடுத்தாள்!
சட்னி சாம்பார் என எது கொடுத்தும்
தோசை உள்ளே
போன மாதிரியே தெரியவில்லை!
யோசித்த அறிவாளி அம்மா
தோசைக்கு பக்கத்தில்
ஜாம் வைத்துப்போனாள்!
ஏன் என்றால்
ஜாம் மகளுக்கு பிடிக்கும்
தோசையை தொட்டு சாப்பிடுவாள் என்று!
அடுப்படியில் நின்றபோது
அருமை மகள் குரல் கொடுத்தாள்!
அம்மா! சாப்டேம்மா என்று!
தன் சமயோகிதத்தை
தனக்குத்தானே பாராட்டியபடியே
அந்த அம்மா ஓடிவந்தாள்!
தட்டில் ஜாம் காலியாகியிருந்தது!
பொண்ணுவாயும் கையும் ஜாமாயிருந்தது!
ஒதுக்கப்பட்ட தோசை அனாதையாய் கிடந்தது!

