மரணம் ஒரு கணக்கு !

மரணம் வரும் நமக்கு – இது
மறுமை நாள் கணக்கு

உணரும் வரை இல்லை –இந்த
துனியாவின் நாள் கணக்கு

பொத்தி வளர்த்த பெற்றோர்கள்
கட்டி வந்த ஆசை மனைவி

பாசம் தந்த பிள்ளைகள் –இன்னும்
பரிவான கோடி உறவு

உடன் வர முடியா ஒரு வழி
இறுதி பயணம் இது

யாருக்கு தெரியும் அந்த நேரம்
அழைக்கும் சமயம் தூரமில்லை

மறுமை கணக்கை நேர் செய்ய
மனம் கொள்வோம் உறுதியோடு

நேர் வழி படுத்தி எங்களை நீ
நெறியோடு வாழவைப்பாய்

மறையோனே ! ரகுமானே
மண்டி இட்டு கேட்கின்றோம்

இறுதிநாளில் பதில் அளிக்க
இறைவா உன்னை வேண்டுகிறோம் !


கவிஞன். இறையடிமை

எழுதியவர் : -ஸ்ரீவை.காதர்- (14-Sep-13, 10:08 am)
பார்வை : 106

மேலே