மந்திர தூக்கம்

சித்திர தூக்கம்
தூக்கத்திற்குள் நுழைவதில்
மந்திரம் செய்யும்
மயக்க நிலையில்
கனன்று சுழலும்
ஒரு பெரு மூச்சில்
இல்லாமல் போகுது
ஒரு பேரிரைச்சல்..
பலமான காற்றுடன்
பெரிய இடிச்சத்தம்
படக்கென பூக்கும்
பூவின் நாவில் பாட்டெழுதி
போவதை
சேமித்து வைக்கிறது
உயிர் கொண்ட உண்டியல்...
மெல்ல மெல்ல நழுவி
கடலில் விழுந்து விட்ட
ஒரு துளி மழை நீரை
தேடிப்பிடிப்பது போன்று,
கில்லாடியான மீன் ஒன்று
மனமெங்கும்
வலை வீசி துரத்துகிறது...
விடியும் வரை
இல்லாமல் போகும்
உணர்வில் ஒரு கூடை
கனவுகளும்
ஒரு வான தூரங்களும்
படிக்கட்டுகளாய்
பாய் விரித்து
விரிந்து கொண்டே போவதில்
ஆழமாய் ஒரு
சித்திரம் வரையப்படுகிறது,
யாரும் பார்க்க முடியாத படி......

எழுதியவர் : கவிஜி (14-Sep-13, 10:36 pm)
பார்வை : 76

மேலே