பதிலை தொலைத்தவன்....

காற்றோடு கை கோர்த்து
காலம் நிற்கும் கணமொன்றில்
நான் தேடுவதில் ஒட்டிக்கொண்டிருப்பது
இறகொன்று...

அது இறகாய்
இருப்பது
என் தேடலுக்கான வசதி...

இரவு பகல், நாள் மாதம்
கடந்து
கடல் மேலே
சிரிக்கையில் கவனம்
கலைகிறது அந்த சிறகு....

இறகை தாண்டி கடலில் குதிக்கும் நான்
ஒன்றை காப்பாற்றி விடுகிறேன்....

அது இறகா.... என்றால் ?
அங்கே நீரில் நீந்தும்
மீனாகி
பதிலை தொலைத்தவனாகிறேன்....

ஒரு தொலைதல் அல்லது தொடர்தலில்
நீட்சியாகி போகிறது
இறகும் கடலும்.....

எழுதியவர் : கவிஜி (14-Sep-13, 2:41 pm)
பார்வை : 84

மேலே