தமிழ்ப் பெண்களின் தோழி
தமிழ்ப் பெண்களின் உடன்
பிறவா தோழி
தூய்மையே வடிவான
நிறமுடையவள்
அவளில்லாத சுப காரியமில்லை
மணவறை முதல் கல்லறை
வரையிலுமிருப்பால்
இவளை அடைய
ஆண்களும் பெண்களாக
பிறக்க என்னுவர்
எம் பெண்களின் பருவம்
மாறினாலும் இவர்கள்
மீதான மோகம்
மாறியதில்லை
இவர்கள் தனித்திருந்தாலும்
படையாயிருந்தாலும்
தன்னுடன் இனைத்துக்
கொள்வார்கள்
எம் குலப் பெண்களுக்கு
பரிசாக இவளா பொன்-ஆ
என்றால் இவளே என்பர்
இவர்கள் படையெடுப்பதில்
வள்ளவர்கள்
இவர்களுல் ஒருவள் போதும்
நாட்டையே தன்
வசம் கொள்வாள்
இவர்களை எதிர்த்து
அடக்கும் மனம்
எம் தமிழினத்தில்
யாருமில்லை
மனம் கொண்ட யாவரும்
இவர்களின் நறுமனத்தையே
நாடுவர்
என் குலப் பெண்கள்
இவர்களுடன் வந்தால்
இளவட்டங்கள்
வட்டமிடுவார்கள்
அவர்கள் தாம் எம்
தமிழ் பெண்கள் சூடும்
"மல்லிகைப் பூ" எம்
தமிழ்ப் பெண்களின்
உடன் பிறவா தோழி
=== க.பிரபு தமிழன்