.....ஏன் முடியாது....?

மதுவை மறப்போம் – அதன்
மயக்கத்தை வெறுப்போம்
மதியாதாற்கும் துதிப்போம் – குடி
மடத்தனம் என்று உரைப்போம்
படியாதப் பேரை உதைப்போம் –பலன்
படிவந்து சேர உழைப்போம்
.....ஏன் முடியாது....?


நீரும் நிலமும்
நீல வானமும்
காற்றும் கதிரும்
கரைந்திடும் மேகமும் – தமிழில்
கவிப்பாடும் என்று
இசைப்பாடுவோம் – நல்ல
இயல் புனைவோம்
...ஏன் முடியது.....?

காணி நிலம் வாங்கி
காயும் கனியும் பயிரிட
ஏங்கி தினம் வாழும்
ஏனய நகர சமூகம்,
வானக்கூரை அமைத்து
வாழையோடு வெள்ளாமையும்
ஈன வழிவகுப்போம்
.....ஏன் முடியாது....?

சாலை ஓரம் மா, புளி நடுவோம்
சந்தில் கூட முந்திரி வளர்போம்
சாலை பிரிவில் முருங்கை நடுவோம்
வலைவுகளின் வெளியில்
வாழை வைப்போம்
உருல் சாலையின் ஓரம்
உருலையும் வெண்டையும் வளர்ப்போம்
ஊடுப்பயிராய் ஆமணக்கும் எள்ளும் விதைப்போம்
கரண்டி சாலை நடுவே
கருணை நடுவோம்
மேம்பாலங்கள் மேலே சூரியகந்தி நடுவோம்-அதன்
மேனியிலே தோரணமாய் அவரைப் போடுவோம்
அரளிச்செடிக்கு பதில் – மஞ்சள்
விரளிகள் பதிப்போம்
வரவுப் பாதயில் வல்லாரை வளர்ப்போம்
அழகு சாய்வுகளில் வள்ளிக்கொடி பதிப்போம்
நிழற்குடைக்குமேல்
நல் பாகற்கொடி ஏற்றுவோம்
கொண்டை ஊசி சாலை
கொண்ட அந்த காலியில்
கொண்டைக் கடலை போடுவோம்
வெண்டை செடியும் நடுவோம்
இன்னும் பல யோசித்து
இந்தியமண்ணை இசைப்போம்
நம் நிலை உயர
நன்நிலம் காப்போம்
வீனான இடங்களில்
விளைவித்து பார்ப்போம்
....ஏன் முடியாது.....?

எழுதியவர் : Shankar (13-Sep-13, 11:49 pm)
பார்வை : 128

மேலே