இன்னொரு ஜென்மம் இருக்குமென்றால்

மறந்துவிடு என்கிறாய் எதை மறப்பது
எப்படி மறப்பதென்று தெரியாமல்
தவிக்கின்றேன் நான்!
கல்லாய் இருந்த என்னை சிற்பமாய் செதுக்கினாய்
உன் காதல் மொழிகளால் செதுக்கிய சிற்பத்தை
நீயே உடைக்க நினைப்பது என்ன நியாயம் பெண்ணே!

உன்னை மறப்பதென்பது இயலாத ஒன்று
உன்னையும் உன் காதலையும்
சுமந்து கொண்டு மீண்டும் பிறப்பெடுப்பேன்
உன்னை அடைவதற்கு இன்னொரு ஜென்மம்
இருக்குமென்றால் ………........!!!!!!!!!

எழுதியவர் : ரெங்கா (1-Jan-11, 4:23 pm)
பார்வை : 566

மேலே