காதல் நினைவாக அவள் நினைவு
கனவாகி போன காதல்
அவள் நினைவு மட்டும்
உயிர் கொடுத்து கொண்டிருகிறது
என் காதலுக்கு....
மழை நின்ற பின்பும்
தொடரும் தூரல் போல
அவளோடு கழிந்த நிமிடங்கள்
ஈரபடுத்தி கொண்டுள்ளது கண்களை....
தனிமையில் அமரும் போது
அவள் நினைவே துணையாக
என்னோடு அமர்கிறது
வாழ்க்கை துணையாக
வருவாள் என எண்ணினேன்
வந்தாள் வழித்துணையாக சிலநாள்....
அவளின் அழகில் மயங்கிய நான்
மயங்கித்தான் கிடக்கிறேன் இன்னும்
அவள் நினைவுகளில்....
அவளால் என்னை மறக்க முடியாது
எனக்கு தெரியும் அவள் மறந்திருந்தால்
நான் என்றோ இறந்திருப்பேன்....
நினைவாக அவள் வாரும் போது
தடுக்க முடியவில்லை அவள்மேல்
கொண்ட காதலையும் அதனால்
வரும் வலியையும்....
மரணம் என்னை வருடும் போதும்
என்னுள் வந்து போகும் அவள் நினைவுகள்
நினைவுகளே அவள் எனக்கு நிறைவாய்
கொடுத்து சென்ற காதல் பரிசு....
காதலின் நினைவாய் அவள்
நினைவுகள் நினைக்க தவரமாட்டேன்
அவளின் நினைவுகளை....