விமர்சனமும் தரிசனமும்

எவ்வித சலனமின்றி நடந்த நிகழ்ச்சியில்
ஏற்பட்டது ஒரு தடுமாற்றம்
சற்றும் எதிர்பாராத சந்தர்ப்பத்தில்
வினையாக வந்து வீழ்ந்த்தது
ஒரு விமரிசனம்,
தனியாக எடுத்து நோக்கின்
அது சாதாரணமாகத் தோன்றும்
சொன்ன நேரத்தையும்
சொன்ன இடத்தையும்
சொல்லிய விதத்தையும்
எடுத்துக்கொண்டால்
அது மிகவும் தாறு மாறாகத்
தெரிந்தது மனதை நோக அடித்தது
சொற்கள் நாகரிமாக பயன்படுத்தி
நயமாக உச்சரிக்க வேண்டும்
வெளியே வந்த பின்
அது நம்மிடையே இல்லை
அவை சீறிப் பாய்ந்து
கிழித்துக் காயப்படுத்தி
மனத்தைக் குதறி விடும்.

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (15-Sep-13, 11:15 am)
சேர்த்தது : Meena Somasundaram
பார்வை : 47

மேலே