அடையாளம்.............

அடையாளத்தை தொலைக்கிறோம்...........
தமிழ் கலாசாரப்படி நடந்தால்
பட்டிக்காடு என்று உணரும்
என்னவர்கள் பலரை
நான் கண்டிருக்கிறேன்......
எமக்கென மிஞ்சியது
இந்த அடையாளம் ஒன்று தான்
இதையும் தொலைப்பதை
கௌரவம் எனக் கொள்கிறோம்.
மற்றவர்க்கு நடுவே
வித்தியாசப்படக் கூடாதென்று
அவர்கள் பின்னே போகிறோம்.
மதிக்கப்படுகிறோமா?
மிதிக்கப்படுகிறோமா?
என்பதை உணராமலே
நாகரிகத்தை நோக்கி
நடந்து கொண்டிருக்கிறோம்.

நடை,உடை,பாவனை
மூன்றும் தான்
இனி நம் அடையாளம்
அடுத்தவன் அள்ளி எடுத்தது அதிகம்
மிகுதியையும் எடுத்து விடுவானோ
என்ற பயத்தில்
நாமாகவே தாரைவார்த்தது
நம் கலாசாரத்தை ..........
காலங்காலமாய்
அடுத்தவர் மத்தியில்
நமக்கென ஓர் மதிப்பு உண்டு.

ஒன்றை மட்டும் சிந்திப்போம்,
நம் செயல் எதுவும்
நம் அடையாளத்தையோ
நம்மவர் அடையாளத்தையோ
தொலைப்பதாய்
அமைந்துவிடக் கூடாது...........

எழுதியவர் : உமா சிவா (15-Sep-13, 10:35 am)
Tanglish : adaiyaalam
பார்வை : 107

மேலே