+குறையொன்றுமில்லை!+

குறைகளை மட்டுமே கண்டு
குழப்பத்தில் ஆழ்ந்து
தானும் குழம்பி
கூட இருக்கும் அனைவரையும் குழப்பி
தானும் நிம்மதி இழந்து
அனைவரையும் நிம்மதி இழக்கவைத்து
தானும் சிரிக்காமல்
சிரிப்பவரையும் முறைத்து முறைத்து
வாழ்க்கையையே வீணாக்கும்
ஒரே இனம்?
அதை நானும் சொல்லத்தான் வேண்டுமா?

இருக்கும் சிறு சிறு
நிறைகளைப்பார்த்தால்
நிம்மதியாய்யாவது இருக்கலாம்!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி ‍‍‍ ‍‍‍‍‍‍‍ (15-Sep-13, 11:26 am)
பார்வை : 70

மேலே