மாடிவீட்டு மயான வீதிகள் .

காகங்களுக்கு மட்டுமல்ல
பூனைகளுக்கும்தான்
தடைசெய்யப்பட்ட பிரதேசம் அது .

எலிகலெல்லாம்
நாடுகடத்தப்படுவதால்

பல்லிகளுக்கும்
கரப்பான் பூச்சிகளுக்கும்
மரண தண்டனை பிரகடன படுத்தப்பட்டாயிற்று .

இருந்தும் .

யாசக கோழிகள் இரைதேடி
தினம் தினம்
மாடிவீட்டு மயான வீதிகளில்தான்
நாய் போல ...

எழுதியவர் : பிரகாசக்கவி - (15-Sep-13, 12:18 pm)
பார்வை : 71

மேலே