மனிதம்
மனிதம் மானுடம் மாய்ந்து போனதால்
தொடர்ந்து தேடுகிறேன்!!
நான் என்ற நயவஞ்சகன் நாடெங்கும் பிரவேசம்
எனது என்னது எங்கும் நிறைந்தது
மனிதம் மானுடம் மாய்ந்து போனதால்
தொடர்ந்து தேடுகிறேன்!!
பணம் படைத்தவன் சாதனை சமைத்தவன்
குணம் கொண்டவன் குறுகி நிற்கிறான்
மனிதம் மானுடம் மாய்ந்து போனதால்
தொடர்ந்து தேடுகிறேன்!!