தம்பட்டம்

தம்பட்டம்

போர்முடிந்ததாய்பெரு முழக்கம் .

குதிரை குட்டியீன்ற யானை முட்டை போல

ஆங்காங்கே தோரணங்கள் அதன் நடுவில் காரணங்கள்

ஒடிந்துபோன ஓராயிரம் வீதிகளுக்கு ஒட்டு போட்டாயிற்று !

இடி இடித்து மின்னல் வெட்டி குடையும் பிடிச்சாச்சு !

காய்ந்த மரங்களுக்கு பச்சை முலாம் பூசப்படுகிறது !

தமிழர் கால் உடைத்து குளிருக்கு குதுகலமாய் சூப்பும் குடிச்சாச்சு !

சோனகர் தோல் உரித்து மத்தாளம் கொட்டலாச்சு !

பெய்யாத பெரு மழையில் பேய் நனைந்து

வாந்தி வருவதாய் தேரைகள் தேவாரம் பாடலாச்சு !

ஆனால் இன்னும் சுதந்திரம் வந்து போனதாய்

சுவடுகள் தானுமில்லை அங்கு !

எழுதியவர் : -பிரகாசக்கவி — (15-Sep-13, 5:18 pm)
பார்வை : 85

மேலே