[505] நமக்கது ரசிப்பது இல்லை!
நமக்கது ரசிப்பது இல்லை!---எசேக்கியல்
கருத்தையே மட்டும் வைத்துக்
கவிதையென்று எழுதப் போமோ?
அருத்தமெல் லாம்கொ டுக்கும்
அகராதி என்ன வாகும்?
சரித்திரம் சொல்லிப் போனால்
சங்கதி கவிதை யாமா?
பொருத்தமாம் அணிகள், சந்தம்,
புதுமை,சேர்த் துரைக்கப் பார்ப்போம்!
எளிமையே போதும் என்றால்
இங்கு,உரை நடையே போதும்!
வளமையைத் தேடு வோரே
வடிவினில் சந்தம் கூட்டி,
பழமை நாள் முதலாய் இங்கு
பாட்டினை வடித்தார் என்பேன்!
நளினமே இல்லா ஆட்டம்
நமக்கது ரசிப்பது இல்லை!
=======